Wednesday, July 23, 2008

இறை பெருமை

காதலர்களை உலகமே காதலிக்கும்
அவர்தம் பெற்றோர்களை தவிர
கற்றாரை கற்றோர் காமுறுவர்
அவர்தம் உற்றாரை தவிர

வைகையில் வெள்ளம் புரண்டாலும்
ஆற்றோரம் குடிஇருப்போர் அல்லலுறுவர்
தாமரையில் வண்டு வந்து தேன்குடிக்கும்
இலையில் இருக்கும் மண்டூகம் அறியுமோ தேன்சுவையை

நிழலுக்கு கிடையாது நினைக்கும் தன்மை
விழலுக்கு விளங்காது நீரின் அருமை
தழலுக்கு தெரியாது உயரின் உண்மை
கழலுக்கு புரியாது கால்களின் பெருமை

அடர்ந்து படர்ந்து நிறைந்து நிற்கும்
உள்ளம் கடந்து உயிராய் விளங்கும்
கதிரும் நிலவும் கண்களாய் ஒளிரும்
இறை பெருமை யார்தான் அறிவாரோ!

1 comment:

தேவன் said...

இப்படி ஒரு தலைப்பில் யாராவது எழுதி இருப்பார்களா என்று சந்தேகத்துடன் தேடினேன்.

/// இறை பெருமை யார்தான் அறிவாரோ! ///


உங்களுடைய இந்த வரிகள் பொன்னானது.